Latestமலேசியா

அரசாங்க ஊழியர்களுக்கு, ஆரம்ப ஊக்கத் தொகையாக ஈராயிரம் ரிங்கிட் வழங்கப்படும் ; பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா, பிப்ரவரி 6 – SSPA எனப்படும் பொதுச் சேவை துறைக்கான சம்பள மறுஆய்வுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பூர்வாங்க அல்லது ஆரம்ப உதவித் தொகை, இம்மாதம் 23-ஆம் தேதி, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துடன் ஒருசேர வழங்கப்படும்.

அரசாங்க ஊழியர்கள் உட்பட ஓய்வூதியம் பெற்பவர்களும் அந்த ஊக்கத் தொகையை பெறுவார்கள்.

புதிய பள்ளித் தவணை மற்றும் ரமலான் மாதத்தை முன்னிட்டு, பெற்றோர்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில் அந்த ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

ஒப்பந்த நியமனங்கள் உட்பட கிரேடு 56-க்கு கீழ்பட்ட அனைத்து அரசாங்க ஊழியர்களும் தலா ஈராயிரம் ரிங்கிட் ஊக்குவிப்புத் தொகையை பெறும் வேளை ; இதர முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்.

அதில், ஓய்வூதியம் பெற்றும் அல்லது ஓய்வூதியம் இல்லாத முன்னாள் இராணுவ வீரர்கள் உட்பட பணி ஓய்வுப் பெற்றவர்களும் அடங்குவர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!