
ஷா ஆலாம், அக்டோபர்-17,
கடந்த வாரம் சிலாங்கூர் சபாக் பெர்ணாமில் 15 வயது மாணவியைப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிய சந்தேகத்தில், இரண்டாம் படிவ மாணவன் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் ஓர் இடைநிலைப்பள்ளியில் காலை ஓய்வு நேரத்தின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
புகார் கிடைத்தவுடன், போலீஸார் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை சேகரிக்க விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பள்ளி நிர்வாகத்திடம் இருந்து CCTV பதிவுகள் மற்றும் சாட்சிகளின் தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.
விசாரணைக்காக சந்தேக நபர் 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
அதே சமயம், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் சாட்சிகளுக்கு மனநல ஆலோசனை மற்றும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் அண்மையக் காலமாக தொடர் கதையாகியுள்ள இதுபோன்ற சம்பவங்கள், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்க நெறி கண்காணிப்பு மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.