Latestமலேசியா

இபிஎப் இலாப ஈவு அதிகரிப்பு; சந்தாத்தாரர்களுக்கு 5.5% இலாப ஈவு அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 3 – ஊழியர் சேமநிதி சந்தாத்தாரர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கு 5.5% இலாப ஈவு அறிவிக்கப்பட்டுள்ளது: அதே ஷரியா கணக்கிற்கு, 5.4% இலாப ஈவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விரண்டுமே, 2022-ஆம் ஆண்டு EPF அறிவித்த இலாப ஈவுத் தொகையை விட அதிகமாகும்.

2022-ஆம் ஆண்டு வழக்கமான சேமிப்புகளுக்கு 5.35% இலாப ஈவும், ஷரியா சேமிப்புகளுக்கு 4.75% இலாப ஈவும் வழங்கப்பட்டிருந்தது.

EPF தலைமை செயல் அதிகாரி அஹ்மாட் சுல்கார்னாயின் அஹ்மட் ஓன் சற்று முன்னர் அவ்வறிவிப்பை வெளியிட்டார்.

அந்நிய முதலீட்டு வருமான அதிகரிப்பே, இந்த கூடுதல் இலாப ஈவுத் தொகையைச் சாத்தியப்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார்.

EPF-பின் மொத்த சொத்தில் அந்நிய முதலீடு 38 விழுக்காடு என்றார் அவர்.

இபிஎப் வரலாற்றில், ஆக அதிகமாக 1983 முதல் 1987 வரை 8.5% இலாப ஈவும், 1988 முதல் 1994 வரை 8% இலாப ஈவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!