Latestமலேசியா

பள்ளிகளில் ‘Energy Stick’ பயன்பாடு தொடர்பில், கல்வி அமைச்சு இன்னும் புகார் எதையும் பெறவில்லை

ஜோகூர் பாரு, பிப்ரவரி 8 – நாட்டிலுள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே, “Energy Stick” பயன்பாடு தொடர்பில், கல்வி அமைச்சு இதுவரை எந்தவொரு புகாரையும் பெறவில்லை.

அது தொடர்பில் புகார் செய்ய விரும்பும் தரப்பினர், கல்வி அமைச்சின் SISPAA எனப்படும் பொது புகார் நிர்வாக முறை வாயிலாக அவ்வாறு செய்யலாம் என, கல்வி துணையமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

“Energy Stick” பயன்பாடு தொடர்பில், கல்வி அமைச்சு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அது அவசியம் எனவும் துணையமைச்சர் சொன்னார்.

எனவே, ஆரம்ப – இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே, “Energy Stick” பயன்பாட்டை அணுக்கமாக கண்காணிப்பதோடு, பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் அது குறித்து விரைந்து புகார் செய்யுமாறும் துணையமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!