Latestமலேசியா

Avision Media ஏற்பாட்டில் விரைவில் வைரல் மற்றும் வாய்ப்புகளின் சங்கமம் என்ற கருப்பொருளில் 2025 சமூகமுனைவர் உச்ச நிலை மாநாடு

புக்கிட் ஜாலில், ஜூலை-5 – வைரல் மற்றும் வாய்ப்புகளின் சங்கமம் என்ற கருப்பொருளில் 2025 சமூகமுனைவர் உச்ச நிலை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட டிக்டோக் நேரலை உள்ளடக்க உருவாக்குநர் நிறுவனமான Avision Media ஏற்பாட்டில், ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 8:30 மணிக்கு கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் MRANTI பூங்காவில் ஒரு நாள் விழாவாக இது நடைபெறும்.

இந்திய உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் டிக்டோக் விற்பனையாளர்கள் குறிப்பாக B40 வர்கத்தினரின் வாழ்க்கைத் தரத்தையும் வணிகத்தையும் மேம்படுத்துவதே இந்த மாநாடாகும்.

டிக்டோக் விற்பனையாளர்கள், affiliates எனப்படும் துணை நிறுவனங்கள் அல்லது விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தக முத்திரைகள் இணைய, கற்றுக்கொள்ள, வளர மற்றும் அங்கீகரிக்கப்பட ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் டிக்டோக் வணிகச் சூழலை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேற்றைய இதன் செய்தியாளர் சந்திப்பில் மாநாடு குறித்த மேல் விவரங்களை, Avision Media நிறுவனரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான சுரேஷ் தனசேகரன் பகிர்ந்துகொண்டார்.

இம்மாநாட்டில் டிக்டோக் வணிக யுக்திகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு கற்பிக்கப்படுவதோடு, trend மற்றும் புதுமைகளைப் பற்றி விவாதிக்கப்படும்.

மிகச் சிறந்த டிக்டோக் முனைவர்களையும் இந்நிகழ்வு கொண்டாடுகிறது.

அதே சமயம் உள்நாட்டு டிஜிட்டல் வட்டத்தில் வெற்றியுடன் வலம் வரும் ஏராளமான பேச்சாளர்களும் இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவர்.

Influencer மற்றும் affiliate marketing மூலம் வளர்ந்து நிற்கும் ஆரோக்கிய வர்த்தக முத்திரையான Neutraa-வின் நிறுவனர் டத்தின் சுமித்ரா, நாட்டின் முதல் நிலை தமிழ் மின்னியல் ஊடகமான வணக்கம் மலேசியாவின் நிறுவனர் தியாகராஜன் முத்துசாமி உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர்.

மாநாட்டில் பங்கேற்க கிடைத்த வாய்ப்புப் பற்றியும் அதன் நன்மைப் பற்றியும் அவர்களில் சிலர் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.

இம்மாநாட்டுக்கான டிக்கெட்டுகள் www.tiket2u.com.my என்ற அகப்பக்கத்தில் விற்கப்படுகின்றன.

ஆர்வமுள்ள டிக்டோக் விற்பனையாளர்கள், affiliates-கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் காலம் தாழ்த்தாமல் இன்றே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும்.

இரண்டாவது, வருமானத்தை உருவாக்கிக் கொள்ளவும், வேகமாக வளர்ந்து வரும் சமூக வர்த்தகத்திற்கு ஏற்ப திறன்களை பெருக்கிக் கொள்ளவும் இம்மாநாடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!