Latestமலேசியா

பங்கோர் தீவு கடல் பகுதியில் சட்டவிரோத இந்தோனேசிய குடியேறிகளை ஏற்றிவந்த படகு மூழ்கியது

லுமுட், மே 12 – பூலாவ் பங்கோர் கடற்பகுதியில், சட்டவிரோத இந்தோனேசிய குடியேறிகளை ஏற்றி வந்ததாக நம்பப்படும் ஒரு படகு இன்று மூழ்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, பேராக் மாநிலத்தின் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் தேடும் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

விடியற்காலை மணி சுமார் 5.30 க்கு கடலில் மிதந்து கொண்டிருந்த படகைக் கண்ட உள்ளூர் மீனவர் ஒருவர், உடனடி உதவி கோரி தனது தரப்பிற்கு புகார் அளித்ததாக பேராக் மாநில கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநரான கேப்டன் முகமட் சுக்ரி கோடோப் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காலை ஆறு மணிக்கு மலேசிய மெரின் போலீஸ் படை, அரச மலேசிய கடற்படை, உள்ளூர் மீனவ சமூகத்தினருடன் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொள்வதற்காக KM GAGAH மற்றும் BENTENG கப்பல்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

அதே வேளையில் உள்ளூர் மீன்பிடிக் கப்பல் ஒன்று 16 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 23 இந்தோனேசியர்களை வெற்றிகரமாக மீட்டது.

அவர்கள் அனைவரும் ஆவணப்படுத்தும் மற்றும் மேல் நடவடிக்கைக்காக கம்போங் ஆச்சேவில் உள்ள மெரின் போலீஸ் படகுத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

படகில் இருந்த சட்டவிரோத குடியேறிகளின் மொத்த எண்ணிக்கை 37 ஆகும். இதுவரை, 23 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியோர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் கேப்டன் முகமட் சுக்ரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!