
ஜோகூர் பாரு, ஜன 24 – ஜோகூர் பாருவில் புஸ்பாகோம் (Puspakom) கிளையின்
பணியாளரை அறைந்ததை ஒப்புக்கொண்ட 60 வயது முதியவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 1,600 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
Majistret Hidayatul Syuhada Shamsudin முன்னிலையில் குற்றச்சாட்டு Mandarin மொழியில் வாசிக்கப்பட்டபோது கோ சூன் ஹூவா ( koh Soon Hua ) என்ற ஆடவர் அதனை ஒப்புக் கொண்டார்.
வேலையில்லாத அந்த நபர் 1,600 ரிங்கிட்டிற்கான அபராதத்தை செலுத்தத் தவறினால் இரண்டு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ஜொகூர் பாரு ஜாலான் பெர்தாமிலுள்ள (Jalan Bertam) புஸ்பாகோம் அலுவலகத்தில் இந்த குற்றத்தை புரிந்ததாக தண்டனைச் சட்டத்தின் 323ஆவது விதியின் கீழ் Kohவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
தாம் ஓட்டிவந்த லோரி முழுமையாக பரிசோதனைக்கு உள்ளாகவில்லை என புஸ்பாகோம் பணியாளர் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த Koh அவரை இடது காதுப் பகுதியில் அறைந்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.