
உலு சிலாங்கூர், ஜன 22 – வழக்கத்திற்கு மாறாக சாலையில் சென்ற குதிரையை பெண் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மோதி காயத்திற்கு உள்ளானனார். இன்று காலை மணி 9 அளவில் பந்தாங் காலி – கெந்திங் ஹைலன்ட் சாலையில் ஒரு வளைவில் நிகழ்ந்த இவ்விபத்தில் 47 வயதுடைய பெண் காயம் அடைந்தார்.
பத்தாங் காலியிலிருந்து கெந்திங் ஹைலன்ஸிற்கு தனது மோட்டார் சைக்கிளில் அப்பெண் வேலைக்கு சென்றபோது திடீரென சாலையில் புகுந்த குதிரையில் மோதினார். அந்த குதிரை சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்தது.
இரண்டு கால்களிலும் காயத்திற்குள்ளான அப்பெண் சிகிச்சைக்காக கோலா குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் இப்ராஹிம் உசேய்ன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
சாலையில் கிடந்த அந்த குதிரையின் உடல் பொதுமக்கள் உதவியோடு அப்புறப்படுத்தி புதைக்கப்பட்டது. இதனிடையே இவ்விபத்தை நேரில் பார்த்தவர்கள் போக்குவரத்து விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நுருல் அனாத்தியுடம் 03- 60641222 என்ற எண்களில் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



