Latestமலேசியா

தன்னை ஏமாற்றிய கணவரின் செயலை அறிவிப்பு பலனை வைத்து அம்பலப்படுத்திய மனைவி?

கோலாலம்பூர், டிச 19 – ஷின் யி என்ற பெண், தன்னை ஏமாற்றிய கணவரின் செயலை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வைத்ததாக கூறப்படும் விளம்பர அறிவிப்பு பலகை வைரலாகி, இணையவாசிகளிடையே விவாதத்தை தூண்டியுள்ளது.

தலைநகர், TTDI – தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலுள்ள, மின் விளம்பர பலகையில், கெவின் தியோ சீ சிங் எனும் ஆடவரின் செயலுக்காக, அவரை தாம் விவாகரத்து செய்வதாக ஷின் யி குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் ஒரு ஏமாற்றுபேர்விளி, பொய்யர். TTDI ஜெர்ரி கோவொர்க்கிங் ஸ்பேஸ் ‘Jerry Coworking Space’ எனுமிடத்தில் நீங்கள் கையும் களவுமாக பிடிப்பட்டீர்கள். அடுத்த முறை ஏமாற்று வேலையில் ஈடுபடும் போது, ஜன்னல் இல்லாத அறையை தேர்வுச் செய்யுங்கள். என்னை தொடர்புக் கொள்ள வேண்டாம். எனது வழக்கறிஞர் உங்களை அழைப்பார்.” என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விளம்பர பலகை காணொளியை, @timothytiah என்பவர் தனது X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததை அடுத்து, லட்சக்கணக்கில் வலைத்தளவாசிகள் அதனை பார்வையிட்டுள்ளனர்.

இதனிடையே அந்த விளம்பர பலகையில் இடம்பெற்றுள்ளது உண்மையில் ஒரு செய்தி தானா? அல்லது அது விளம்பர தந்திரமா? எனும் விவாதம் தற்போது சமூக ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், அந்த விளம்பர பலகை தொடர்பில், TTDI ஜெர்ரி கோவொர்க்கிங் ஸ்பேஸ் ‘Jerry Coworking Space’ தரப்பு இன்னும் கருத்துரைக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!