
நீலாய், மார்ச்-4 – நெகிரி செம்பிலான், நீலாயில் முகமூடி அணிந்த கும்பல் நகைக்கடையைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
அங்குள்ள பேரங்காடியில் நேற்றிரவு 8.45 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளன.
முகமூடி அணிந்த 2 ஆடவர்கள் கண்ணாடிப் பெட்டிக்குளிலிருந்து நகைகளை அள்ளுவது அவ்வீடியோக்களில் தெளிவாகத் தெரிகிறது.
அவர்களில் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் விழிப்பாக இருந்த நிலையில், அவனது சகா கொண்டு வந்த பையில் நகைகளை நிரப்புகிறான்.
சிறிது நேரத்தில் இருவரும் நகைகளோடு அங்கிருந்து தப்பியோடினர்.
அச்சம்பவத்தை உறுதிச் செய்த நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் Datuk Ahmad Dzaffir Mohd Yussof, சம்பவ இடத்தில் போலீஸும் தடயவில் குழுவும் ஆதாரங்களைத் திரட்டி வருவதாகச் சொன்னார்.
முழு தகவல்கள் கிடைத்ததும் அறிக்கை வெளியாகுமென்றார் அவர்.