
ஹைதரபாத், மார்ச் 5 – பிரபல பாடகியும் தொலைக்காட்சி பிரபலம் கல்பனா ராகவேந்தர் ( Kalpana Ragavender ) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஹைதரபாத் மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களின் உதவியோடு அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெலுங்கு சினிமா வட்டார தகவல்கள் தெரிவித்தன.
தூக்க மருந்தை உட்கொண்டு கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவரது வீட்டின் கதவை வலுக்கட்டாயமாக உடைத்து போலீசார் அவரை மீட்டனர்.
தற்போது அந்த பாடகி சீரான நிலையில் இருப்பதோடு செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களாக அந்த பாடகியின் வீடு திறக்கப்படாமல் இருந்தது அண்டை வீட்டுக்காரர்களுக்கு தெரிவந்ததைத் தொடர்ந்து போலீசிற்கு தகவல் கொடுத்தனர்.
அந்த பாடகியின் கணவர் சென்னையில் இருப்பதால் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
2010 ஆம் ஆண்டு மலையாள மொழி தொலைக்காட்சி பாடல் போட்டியில் கல்பனா வெற்றி பெற்றார்.
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் T.S.ராகவேந்திராவின் மகளான கல்பனா இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோரின் பின்னணி இசைகளிலும் அவர் பாடியுள்ளார்.
1986 ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹசானுடன் சேர்ந்து பாடகி கல்பனா நடித்துள்ளார்.