Latestமலேசியா

5 இந்தியர்கள் உட்பட 23பேர் காஜாங் கவுன்சிலர்களாக பதவியேற்பு

காஜாங், ஜன 20 – 2024-2025 தவணைக்கான காஜாங் நகராண்மைக் கழக புதிய கவுன்சிலர்காளக அல்லது புதிய உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் உள்பட 23 பேர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 24 பேரில் ஒருவர் பதவியேற்புக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காஜாங் எம்.பி.கே.ஜே. தலைமையகத்தில் நடைபெற்ற பதவியேற்ப்பு சடங்கில் அனைத்து 23 உறுப்பினர்களும் காஜாங் நகராண்மைக் கழகத் தலைவர் நஸ்லி முகமட் தாயிப் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பி.கே.ஆர். உலு லங்காட்டைச் சேர்ந்த சந்திரன் ராமசாமி, ராமசந்திரன் அர்ச்சுனன், பி.கே.ஆர். பாங்கி தொகுதித் தலைவர் பாலமுரளி கோவிந்தராஜு, ஜ.செ.க.வைச் சேர்ந்த தியாகராஜா ராஜகோபால், சங்கீதா சந்திரமோகன் ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் ஏற்கனவே கடந்தாண்டிலும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த தவணையிலிருந்து பணியாற்றி வரும் நகராண்மைக் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாக காஜாங் நகராண்மைக் கழக தலைவர் நஸ்லி முகமட் தெரித்தார். பழைய நகராண்மைக் கழக உறுப்பினர்களின் அனுபவங்களுடன் புதிய நகராண்மைக் கழக இணையும் போது இவ்வாண்டு மற்றும் அடுத்தாண்டில் எம்.பி.கே.ஜே. மிகவும் சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்யும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!