Latestமலேசியா

சாண்டாகானில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில், 6 சீன சுற்றுப்பயணிகள் உட்பட எழுவர் காயம்

சாண்டாகான், ஜனவரி-26 – சபா, சாண்டாகானில் இன்று காலை சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில், சீனாவைச் சேர்ந்த 6 சுற்றுப்பயணிகள் உட்பட எழுவர் காயமடைந்தனர்.

63 வயது பேருந்து ஓட்டுநரும் படுகாயமடைந்தார்.

ஜாலான் சிபுகாவில் ஒரு பேரங்காடிக்கு முன்புறம் இன்று காலை 9 மணிக்கு அவ்விபத்து நிகழ்ந்தது.

தீயணைப்பு-மீட்புத் துறையினர் வந்து சேருவதற்குள், காயமடைந்த அனைவரும் அங்கிருந்த பொது மக்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவத்தின் போது, 13 பெரியவர்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 17 சீன சுற்றுப்பயணிகளை அப்பேருந்து ஏற்றியிருந்தது.

விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!