
கோலாலம்பூர், அக்டோபர் 4 – மாணவர்களைச் சீரழித்து வரும் இ-சிகரெட்டுகள் மற்றும் வேப் பயன்பாடு, தற்போது மிகவும் மோசமடைந்து வருகிறது எனலாம்.
முதலில், கவர்ச்சிகரமான நிறங்களில் மாணவர்களை மின் சிகரெட் பக்கம் இழுத்து வந்த வியாபாரிகள், இப்போது எழுது பொருள் போல, மார்க்கர் பேனா & UHU பசை வடிவில் கவர்கின்றனர்.
கண்ணில் மண்ணைத் தூவுவது போல, மாணவர்களும் இந்த பழக்கத்தை கண்டுபிடிக்க முடியாதபடி தந்திரமாகச் செயல்பட, பள்ளிக்குப் பயன்படுத்தும் எழுது பொருட்கள் சாயலில் மின் சிகிரெட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.
முதல் பார்வையில், அது ஏதோ எழுதுபொருள் போல் தெரிந்தாலும், மீண்டும் கூர்ந்து கவனித்தல் அது மின் சிகிரெட் என்பது தெரிய வருகிறது.
இந்நிலையில், பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும், செயல்பட வேண்டும்.
தங்களது பிள்ளைகள் வைத்திருக்கும் பள்ளி பொருட்களை அன்றாடம், பார்வையிடுவது அவசியமாகும்