
கோலாலம்பூர், ஜனவரி-26 – ‘ஊழலை வெறுக்கும் மக்கள்’ என்ற பெயரில் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற அமைதிப் பேரணியில், பல்வேறு முழக்கங்கள் கவனத்தை ஈர்த்தன.
கறுப்புச் சட்டையில் சோகோ பேரங்காடியில் கூடிய 300 பேர், பின்னர் மெர்டேக்கா சதுக்கம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
தேசிய சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தை பிரதமர் துறை அலுவலகத்திலிருந்து கூடிய சீக்கிரமே பிரிக்க வேண்டும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பாணயத்தை விடுவிக்க வேண்டும், அரசியல் நன்கொடை சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை அப்பேரணி வலியுறுத்தியது.
இந்தப் பேரணியில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களின் சமூக ஆர்வளர்களும் கலந்துக் கொண்ட நிலையில், தொடக்கத்தில் இந்தப் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர், பிரதமர் அன்வார் இப்ராஹிம் இப்பேரணிக்கு தடை இல்லை என்று கூறிய நிலையில் நேற்று அது நடத்தது குறிப்பிடத்தக்கது.