
ஷா அலாம், ஜன 20 – கிளான் மேரி தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவவணன் 10,000 ரிங்கிட் நன்கொடை வழங்கினார்.
இப்பள்ளியின் 2024 ஆம் ஆண்டு நேர்த்தி
நிறை விழா மிகவும் விமரிசையாக நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கி அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்து உரையாற்றிய சரவணன் , நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி மட்டும் அல்லாமல் சமயம், மொழிப்பற்று, செயற்கை நுண்ணறிவு (AI), புத்தாக்கத் திறன் என்று அனைத்திலும் மேன்மையடையச் செய்ய வேண்டும் என்றார்.
“மனமிருந்தால் மார்க்கம் உண்டு. ஒவ்வொரு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் சுற்று வட்டார மக்களும், ஆசிரியர்களும் ஒன்று திரண்டாலே போதும். நம் பள்ளிகளை நாமே பார்த்துக் கொள்ளலாம் என்று சிறப்பாக எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் பள்ளிக்கு நன்கொடை அளித்து உதவிய டத்தோஸ்ரீ சரவணனுக்கு பள்ளி நிர்வாகத்தினரும் பள்ளியின் தலைமையாசிரியர் மணிமலர் இராமதாஸ் ஆகியோரும் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கு கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்விசார் சிறப்பு தேர்ச்சி விருதுகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பள்ளியின் புறப்பாட துணை தலைமையாசிரியை ந. கலைவாணியின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மற்றும் தேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் எஸ்.பாண்டியன், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா தமிழ்மொழிப் பிரிவின் துணை இயக்குநர் வீ.செங்குட்டுவன், ஷா ஆலாம் மாநகர் மன்ற உறுப்பினர் மு.முருகையா, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குருபாதம் மற்றும் பள்ளியின் வாரியத் தலைவர் அவரது செயலவை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.