Latestமலேசியா

தேசிய அளவிலான மலாய் மொழி கதை கூறும் போட்டியில் இந்திய மாணவி வேல் விழி நாகமணி வெற்றி

கிளாந்தான், அக்டோபர் 23 – இந்திய மாணவர்கள் எதிலும் வல்லவர்கள் என்பதை பறைசாற்றும் விதமாக அவர்களின் வெற்றி எல்லா துறைகளிலும் பேசப்படுவதும் போற்றப்படுவது பெருமைப்படகூடியது.

அவற்றில், மொழி தொடர்பான வெற்றிகளையும் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பதித்து தங்களது ஆளுமையால் பல மகுடங்களைச் சூட்டி வருகின்றனர் என்றால் மிகையாகாது.

அந்த வரிசையில், அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான மலாய் மொழி கதை கூறும் போட்டியில், கிளாந்தானைச் சேர்ந்த வேல் விழி நாகமணி முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியில், இவருடன் இணைந்து 16 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

அதில் 12 வயது, வேல் விழி ‘நேர்மையான மீனவர்’ என்ற தலைப்பில் கதை கூறி இவ்வெற்றியை தன் வசமாக்கியுள்ளார்.

மலாய் மொழியில் அவர் கொண்ட ஆர்வமே, 3 நாட்களுக்கு நெகிரி செம்பிலானில் சர்வதேச Inti பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், வெற்றியை எட்ட வழிவகுத்துள்ளது.

கிளாந்தானிலுள்ள தேசிய வகை Peir Chih சீன ஆரம்பப்பள்ளி மாணவியான இவர் திருமுறை போட்டிகளிலும் பரதநாட்டிய போட்டிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பதாக தாய் ராஜேஸ்வரி சந்திரசேகரன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை. முறையான பயிற்சி இருந்தால் வெற்றி தன் வசப்படும் என்பதற்கு வேல் விழி நாகமணியின் வெற்றி சிறந்த எடுத்துக்காட்டு.

மேலும் பல வெற்றிகள் அடைய இவருக்கு வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துகள்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!