
கோலாலம்பூர், மார்ச் 3 – மலேசிய பிரஜைகளின் வாழ்க்கை துணைகள் நிரந்தர வசிப்பிடத்தை பெறுவதற்கான மேம்படுத்தப்பட்ட நுழைவு விண்ணப்பங்கள் செப்டம்பர் 1ஆம்தேதி முதல் செயல்படுத்தப்படும் .
மலேசிய குடிமக்களின் மனைவிகளுக்கு குறைந்தபட்ச திருமண காலம் மூன்று ஆண்டுகள் தேவை என்றும், அவர்கள் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவதற்கு முன்பு, ஒரு வருடத்திற்கு சமூக வருகை அனுமதிச்சீட்டை வைத்திருக்க வேண்டும் என்று உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்
சம்சுல் அனுவார் நஸரா ( Shamsul Anuar Nasarah ) கூறினார்.
இந்த வகை விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதில் சிறப்பு பரிசீலனைகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இன்று மேலவையில் கேள்வி பதில் அமர்வின்போது டத்தோ Koh Nai Kwong எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது சம்சுல் இத்தகவலை வெளியிட்டார்.
மலேசிய குடிமக்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கான நுழைவு அனுமதி செயல்முறையை சீரமைக்க செய்யப்பட்ட மேம்பாடுகள் பற்றி கோ கேள்வி எழுப்பியிருந்தார்.
மலேசிய குடிமக்களின் கணவர்களுக்கு குறைந்தபட்ச திருமண காலம் ஐந்து ஆண்டுகள் தேவையாகும் . இந்த பயன்பாடுகள் புள்ளிகள் அடிப்படையிலான அமைப்பைப் பயன்படுத்தி மதிப்பிடப்படும். கடந்த ஆண்டு போலீஸ் மற்றும் குடிநுழைவுத் துறையுடன் தொடர்ச்சியான கலந்துரையாடலை தொடர்ந்து இந்த மேம்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சம்சுல் கூறினார்.