
கோலாலம்பூர், டிச 9 – நாடு முழுவதிலும் 7,779 கூட்டுறவு கழகங்கள் தங்களது கணக்கறிக்கைகளை புதுப்பிக்கவில்லை என்பதோடு 2,304 கூட்டுறவு கழகங்கள் கணக்குகளை இன்னும் தனிக்கை செய்யாமல் இருப்பதாக தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
எனினும் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் மலேசிய கூட்டுறவு ஆணையம் ஆலோசனை, பயிற்சி மற்றும் கணக்கறிக்கைகளை வழங்கி அந்த கூட்டுறவு கழகங்கள் நிதி நிர்வாக பிரச்சனையை எதிர்நோக்காமல் இருப்பதை உறுதி செய்திருப்பதாக அவர் கூறினார்.
அண்மையில் தீபகற்ப மலேசியாவிலுள்ள சுமார் 3,000 கூட்டுறவு கழகங்களுக்கும் , சபா மற்றும் சரவாக்கை சேர்ந்த 3,500 கூட்டுறவு கழகங்களுக்கும் தணிக்கை நிர்வாகம் மற்றும் கணக்கறிக்கைக்காக நிதி உதவி செய்யப்பட்டதாக இன்று நாடாளுமன்றத்தில் Betong நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்
Richard Rapu எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதில் அளித்தபோது ரமணன் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் 16,009 கூட்டுறவு கழகங்கள் பதிவு பெற்றுள்ளதாகவும் அவற்றில் 9,823 கூட்டுறவு கழகங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.