Latestமலேசியா

இந்தியாவில், ‘உலர் ஐஸ்’ கலக்கப்பட்ட உணவை உட்கொண்ட ஐவர் இரத்த வாந்தி எடுத்து கவலைக்கிடம் ; உணவக நிர்வாகி கைது

இந்தியா, மார்ச் 8 – இந்தியா, புது டெல்லியின், வட நகரமான குருகிராமில், சர்க்கரை மற்றும் மசாலாப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்ததில், உலர் ஐஸ்சை கலந்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறியதாக கூறப்படும் உணவக நிர்வாகி ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் இரண்டாம் தேதி அந்த உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “பார்ட்டி” ஒன்றின் போது, அங்கு உணவருந்திய ஐந்து நண்பர்கள், இரத்த வாந்தி எடுக்கும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளை ; உலர் ஐஸ் கலந்த உணவை உட்கொண்டதால் அவர்கள் பாதிக்கப்பட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உலர் ஐஸ் பொதுவாக தற்காலிக குளிரூட்டலுக்குப் பயன்படுத்தப்படும் கார்பன் டை ஆக்சைட்டின் திட வடிவமாகும்.

அச்சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கணவர் கொடுத்த புகாரை அடுத்து, இம்மாதம் ஐந்தாம் தேதி, லாபோர்ர்ஸ்டா கபே (Laforestta Cafe) எனும் அந்த உணவகத்தின் நிர்வாகி கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

உணவக உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!