Latestமலேசியா

ஆசியாவில் சிறந்த நாடுகளின் பட்டியலில் மலேசியாவுக்கு இரண்டாவது இடம்

கோலாலம்பூர், பிப் 14 – ஆசியாவில் நட்புறவான நாடுகளின் முதல் 5 நாடுகளின் பட்டியலில் மலேசியா இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது என “Finance Website” இணையத்தள பதிவேடான “Insider Monkey” நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் 15 நட்புறவு நாடுகளின் பட்டியலில் 2.20 புள்ளிகளைப் பெற்று மலேசியாவும் இடம்பெற்றுள்ளது. இந்த மதிப்பீடு மலேசியாவை உலகின் 16வது குடியேற்ற நட்பு நாடாகவும் தரவரிசைப்படுத்துகிறது. 10.7 விழுக்காடு மக்கள்தொகையில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளைத் தவிர அவர்கள் வாழும் நாட்டை அந்த எண்ணிக்கை குறிக்கிறது.

மேலும் உலகில் குடியேறிகளுக்கான நட்புறவு நாடுகளின் பட்டியலிலும் மலேசியா 16 இடத்தில் இடம்பெற்றுள்ளது. மலேசியாவை வெளிநாட்டில் வாழும் 25வது சிறந்த நாடாகவும் “Insider Monkey” பட்டியலிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 26 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்கு பயணம் செய்தனர். இது அதிக விசா ஏற்றுக்கொள்ளும் விகிதத்தால் உதவியது. Passport Index 2024-இன்படி , பயணிகளுக்கு வழங்கப்படும் விசா மற்றும் மின்னணு பயண அங்கீகாரம் (ETA) நுழைவு ஆகியவற்றின் அடிப்படையில் மலேசியா உலகின் நான்காவது மிகவும் வரவேற்கத்தக்க நாடு என்று மதிப்பீடு கூறியது. ஐக்கிய அரபு சிற்றரசு 2.52 மதிப்பெண்களுடன் ஆசியாவின் ஐந்து நட்பு நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!