Latestமலேசியா

15 வயது இளம் பெண் கடத்தல்; சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, டிச 5 – 15 வயது இளம் பெண்ணை கடத்திச் சென்றதாக சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பயிலும் சீனாவைச் சேர்ந்த மாணவன் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் R. சாலினி (Salini ) முன்னிலையில் 22 வயதான ஹூவாங் ஷியானோன் ( Huang Xiaonan) என்ற மாணவனுக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை அவன் மறுத்தான். அந்த மாணவன் அப்பெண்ணை ரகசியமாக அடைத்து வைக்கும் நோக்கத்துடன் கடத்தியதாகக் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 24ஆம் தேதி மாலை மணி 4.08 அளவில் ஜோகூர் பாரு ஜாலான் ஸ்டேஷனில் உள்ள ஒரு பட்ஜெட் ஹோட்டலில் Huang இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 365 ஆவது பிரிவின் கீழ் அந்த நபருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. குற்றத்தின் தீவிரம் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சீனாவைச் சேர்ந்தவர் என்ற நிலையை கவனத்திற்கொண்டு, நாட்டிலிருந்து வெளியேறும் அபாயம் இருப்பதால் அவனுக்கான ஜாமினை நிராகரிக்கும்படி இதற்கு முன் அரசு தரப்பு வழக்கறிஞர் நூர் அமிரா அலாவ்டின் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் அனுமதி வழங்க மாஜிஸ்திரேட் சாலினி நிராகரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!