
குளுவாங், பிப் 14 – ஒரு மஞ்சள் நிற ஹோண்டா எக்கோட் (Honda Accord ) கார் இன்று காலை குளுவாங்கில் தெருக்களை பந்தயப் பாதையாக மாற்றியது.
அக்காரை போலீஸ் ரோந்து கார் துரத்திய சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பானது.
தொடர்ச்சியான வைரல் காணொளியில், பிரகாசமான மஞ்சள் செடான் (Sedan) கார் கம்போங் மெலாயு (Kampung Melayu) மற்றும் குளுவாங் நகர் வழியாக வேகமாக செல்வதையும் அதனை போலீசார் துரத்திச் செல்வதையும் பார்க்க முடிந்தது.
சந்தேக நபர் போக்குவரத்து எச்சரிக்கை விளக்கில் மற்றொரு காரில் மோதியதால் அந்த நபரை கைது செய்வதற்கு போலீஸ் அதிகாரிகளுக்கு சரியான வாய்ப்பை ஏற்படுத்தியது.
போலீசார் மேற்கொண்ட இந்த விரைவான நடவடிக்கைக்காக அவர்களை பல நெட்டிசன்கள் பாராட்டினர்.
மற்றவர்கள் அந்தக் காட்சியை பந்தய வீடியோ கேம்களுடன் (game) ஒப்பிட்டனர்.