
சந்தோ டோமிங்கோ, ஏப் 9- Dominika குடியரசின் தலைநகரில் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் பிரபலமான பாடகர், வட்டார கவர்னர், மற்றும் பேஸ்பால் முன்னாள் விளையாட்டாளர் உட்பட 66 பேர் மரணம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் 155 பேர் காயம் அடைந்தனர். பாடகர் Rubby Perez இசை நிகழ்ச்சியை படைத்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த அந்த சம்பவத்தில் அவரும் இறந்தார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அரசியல்வாதிகள், விளையாட்டாளர்கள், சமூக தலைவர்கள் மற்றும் பிரபலமானவர்களும் கூடியிருந்தனர்.
இந்த சம்பவத்தின்போது அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என அவசர மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதற்காக மீட்புக் குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.