Latestமலேசியா

வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்கும் World of Words (WoW-KL) வாசிப்பு & கதை சொல்லல் விழா; செப்டம்பர் 17 முதல் 19 வரை

கோலாலம்பூர், செப்டம்பர்-18 – World of Words – Kuala Lumpur அல்லது WoW-KL எனும் வாசிப்பு மற்றும் கதை சொல்லல் விழா, செப்டம்பர் 17 முதல் 19 வரை பேங்க் நெகாரா கட்டடத்தின் Sasana Kijang மையத்தில் நடைபெறுகிறது.

நாட்டில் வாசிக்கும் கலாச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கில், தேசிய நூலகம், மலேசிய எழுத்தாளர் சங்கம், பிரிட்டிஷ் கவுன்சில், கூகள் மலேசியா உள்ளிட்ட பல அமைப்புகளுடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

முதல் நாளில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, குழந்தைகள் புத்தகங்கள் மற்றும் பள்ளிகளின் பங்கு குறித்து விவாதங்கள் நடந்தன.

இரண்டாம் நாள் பல்கலைக்கழகங்கள் மற்றும் இளைஞர்களுக்காக “How to Make Literature Cool Again” போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.

மூன்றாம் நாளில் பொது மக்கள் பங்கேற்று, வாசிப்பு பழக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் பதிப்புத்துறையில் புத்தாக்கம் குறித்து கவனம் செலுத்தப்படும்.

WoW-KL நிறுவனர் Sajeet Saudagar இந்நிகழ்வு குறித்து வணக்கம் மலேசியாவிடம் பேசினார்.

வரவேற்பு சிறப்பாக இருந்ததாக ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கலந்துரையாடல் விருந்தினர்களும் நூலாசிரியர்களும் நிகழ்ச்சியின் சிறப்பசம் குறித்து பேசினர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக பிரபல எழுத்தாளர்களின் உரைகள், படைப்பாற்றலை வளர்க்கும் பணிப்பட்டறைகள், புத்தக வெளியீடுகள் மற்றும் WoW-KL விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வு, மலேசிய சமுதாயத்தில் வார்த்தைகளின் மந்திரத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான நீண்டகால இயக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!