
கோலாலம்பூர், டிசம்பர் 22 – மலேசியப் பாடகர் Namewee மீது பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்துதல் வழக்கில் கோலாலம்பூர் நீதிமன்றம் அவருக்கு முழுமையான விடுதலையை வழங்கியுள்ளது.
அவரின் சிறுநீரக பரிசோதனை முடிவில் போதைப்பொருள் இல்லாததை தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆபத்தான போதைப்பொருள் பயன்படுத்திய மற்றும் வைத்திருத்தல் சட்டத்தின் கீழ் Namewee மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனிடையே தற்போது போதைப்பொருள் பயன்படுத்துதல் வழக்கிலிருந்து அவர் விடுதலை பெற்றிருந்தாலும் போதைப்பொருளை வைத்திருத்தல் தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த அக்டோபர் 22 ஆம் தேதியன்று கோலாலம்பூரிலுள்ள தங்கும் விடுதியில் அவர் கைது செய்யப்பட்டப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான 9 போதைப்பொருள் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



