
வொருக்லோ, மே 29 – இன்று காலை Wroclaw வில் நடைபெற்ற
UEFA Conference லீக் இறுதியாட்டத்தில் செல்சி 4 -1 என்ற கோல் கணக்கில் Real Betis கிளப்பை வீழ்த்தியதன் மூலம் நான்கு ஐரோப்பிய கிண்ணங்களை வென்ற முதல் கிளப் என்ற சாதனையைப் படைத்தது. இந்த ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே Abde Ezzaizouli போலாந்தின்
Real Betis Club வுக்கான முதல் கோலை அடித்து செல்சி குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
எனினும் பிற்பகுதி ஆட்டத்தில் செல்சி குழு தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி எதிர்ப்பார்க்கப்பட்டதை விட எளிதாக இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றது. 5 நிமிட இடைவெளியில் முதல் இரண்டு கோல்களை Enzo Fernandez மற்றும் Nicolas Jackson அடிப்பதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த Cole Palmer இந்த ஆட்டத்தில் சிறந்த விளையாட்டாளராகவும் தேர்வுபெற்றார். செல்சிக்கான மூன்றாவது கோலை 83 ஆவது நிமிடத்தில்
Jadon Sancho வும் நான்காவது கோலை கடைசி நிமிடத்தில் Moises Calcedo வும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் Champion League, ஐரோப்பிய லீக் , Conference லீக் மற்றும் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தையும் செல்சி வென்றுள்ளது.