Latestமலேசியா

ரி.ம 400,000 போலி பண கோரிக்கை நிறுவன ஆலோசகர் கைது

கோத்தா கினபாலு, மார்ச் 13 – பொய்யான தகவலைக் கொண்ட ஆவணங்களை பயன்படுத்தி 400,000 ரிங்கிட்டிற்கும் மேலாக போலி பண கோரிக்கையை சமர்ப்பித்த சபா மாநிலம் அரசாங்க நிறுவனத்தின் ஆலோசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை உதவி திட்டத்தின் கீழ் தொழில் முனைவர்களுக்கான இயந்திரங்களை விநியோகித்தது தொடர்பில் 50 வயதுடைய சந்தேகப் பேர்வழி அந்த போலி பணக் கோரிக்கையை சமர்ப்பித்ததாக கூறப்பட்டது.

வாக்குமூலம் அளிப்பதற்காக மாநில MACC அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டபோது அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதை சபா MACC தலைவர் டத்தோ கருணாநிதி உறுதிப்படுத்தினார்.

2009ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 17 மற்றும் 18 ஆவது விதியின் கீழ் அந்தபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கருணாநிதி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!