Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்மலேசியா

தென் கலிபோர்னியாவை அழித்து வரும் காட்டுத் தீ; பிரதமர் அன்வார் அனுதாபம்

புத்ராஜெயா, ஜனவரி-10, அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் பரவியுள்ள வரலாறு காணாத காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மலேசியா சார்பில் பிரதமர் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தென் கலிஃபோர்னியாவே காட்டுத் தீயில் அழிந்து வருகிறது.

அதில் உயிர் பலியுடன், ஆயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் சேதமடைந்துள்ளன; ஏராளமான குடும்பங்கள் நிற்கதியாக நிற்கின்றன.

இத்துயரத்தில் மலேசியாவும் பங்குக் கொள்கிறது; சீக்கிரமே காட்டுத் தீயின் சீற்றம் தணிந்து, அங்கு இயல்பு நிலைத் திரும்புமென பிராத்திப்பதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டார்.

கடுமையான வறட்சிக்கு மத்தியில் வீசிய புயல் காற்றினால், வட மற்றும் மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளது.

இதனால் 30,000 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை ஐவர் உயிரிழந்துள்ள நிலையில், வனப்பகுதிக்கு அருகேயுள்ள ஆயிரக்கணக்கான இருப்பிடங்கள், வர்த்தகத் தளங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் தீயில் அழிந்துப் போயுள்ளன.

Paris Hilton, Leonardo DiCaprio உள்ளிட்ட ஏராளமான ஹாலீவூட் பிரபலங்களின் கோடிக் கணக்காக டாலர் மதிப்பிலான ஆடம்பர மாளிகைகளும் காட்டுத் தீயில் அழிந்துபோயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!