கோலாலம்பூர், செப்டம்பர் 30 – நேற்று நடைபெற்ற Tech Terrain கல்லூரியின் 13ஆம் ஆண்டின் பட்டமளிப்பு விழாவில், நாட்டின் 12வது திட்ட இலக்கின் படி, 240 TVET டிப்ளோமா திட்டப் பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்.
பொறியியல், Logistics மற்றும் retail management ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் பட்டம் பெற்றிருக்கின்றனர்.
இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து சிறப்பித்தார்.
அரசாங்கம் TVET கல்விமுறைக்கு வழங்கும் முக்கியத்துவதிற்கு ஏற்ப Tech Terrain கல்லூரியும் மிகச் சிறந்த முறையில் TVET பயிற்சிகளை வழங்கி வருவதாக பட்டமளிப்பு விழாவை துவக்கிவைத்த பின், செனட்டர் சரஸ்வதி கூறினார்.
இதனிடையே, 250 அனைத்துலக தொழில்துறைகளுடன் இணைந்து தொழில் கல்வியை வழங்கி வரும் நிலையில், Tech Terrain கல்லூரியில் பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் மகிழ்வான தருணங்களை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
மலேசியாவில் TVET தொழிற்கல்வியில் பீடிநடை போடும் தனியார் கல்லூரிகளில் ஒன்றான Tech Terrain College, 2003ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
வேலை வாய்ப்புகளுடன், பொறியியல், logistics, retail, அலுவலக நிர்வாகி, தகவல் தொழில்நுட்ப கல்வி, பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி திறன்களை, இது வழங்கி வருகிறது.