Latestமலேசியா

TMM2026 : இங்கிலாந்திலிருந்து 500,000 சுற்றுப் பயணிகளைக் கவர மலேசியா இலக்கு

லண்டன், ஜூன்-4 – 2026 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டை(TMM2026) ஒட்டி இங்கிலாந்திலிருந்து 500,000 சுற்றுப் பயணிகளைக் கவர அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் அந்நாட்டு சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையை வைத்து பார்த்தால், அவ்விலக்கை அடைவது சாத்தியமே என, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.

வரும் மாதங்களில் அவ்வெண்ணிக்கை மேலும் உயருமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அதற்கு ஏதுவாக 103 புதிய அனைத்துலக வழித்தடங்களுக்கான பயணச் சேவைகள் தொடக்கப்பட்டுள்ளன.

பிரிட்டன் சென்றுள்ள துணைப் பிரதமர், லண்டனில் TMM2026 பிரச்சார இயக்கத்தை தொடக்கி வைத்த பிறகு அவ்வாறு கூறினார்.

மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டின் பிரச்சார இயக்கம் லண்டனில் திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

கடந்தாண்டு 390,035 பிரிட்டன் சுற்றுப் பயணிகள் மலேசியா வந்தனர்; இதன் மூலம் 2.5 பில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!