Latestமலேசியா

TNB வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் மாதக் கட்டணங்களில் விகிதாசாரத் தள்ளுபடி வழங்கப்படும்

கோலாலம்பூர், அக்-2-மாதம் 800 கிலோவாட்-மணி (kWh) வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் TNB வாடிக்கையாளர்களுக்கு, செப்டம்பர் மாதக் கட்டணச் சரிசெய்தலுக்கான விகிதாசார வரவு அக்டோபர் 2026 மின்சாரக் கட்டணத்தில் நேரடியாக வழங்கப்படும்.

அரசாங்கம் செப்டம்பர் 17ஆம் தேதி வீட்டு உபயோகிப்பாளர்களுக்கான பாதுகாப்பு வரம்பை 600 kWh-லிருந்து 800 kWh-ஆக உயர்த்தியதைத் தொடர்ந்து அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாண்டு செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மாதம் 800 kWh அல்லது அதற்கும் குறைவாகப் பயன்படுத்துவோர் தானியங்கி எரிபொருள் சரிசெய்தல் கட்டணம், 10 ரிங்கிட் சில்லறைக் கட்டணம் மற்றும் 8% சேவை வரியிலிருந்து முழு விலக்கு பெறுவர்.

இந்தச் சரிசெய்தல் வாடிக்கையாளர்களின் கட்டணம் சீட்டில் குறிப்பிட்ட விவரங்களின் கீழ் காட்டப்படும் என TNB தெரிவித்துள்ளது. மேலும், மின்சாரச் செலவைக் குறைக்க சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியவர்கள் myTNB செயலி மூலம் தினசரி மின்சாரப் பயன்பாட்டைக் கண்காணிக்க ஊக்குவிக்கப்படுகிறது. குளிரூட்டியை 24°C முதல் 26°C வரை வைத்தல், டைமர் பயன்படுத்துதல் மற்றும் அதிக மின்சாரம் தேவைப்படும் சாதனங்களைக் குறைந்த மின் தேவை நேரங்களில் பயன்படுத்துதல் போன்ற சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு ஆலோசனை கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!