Latest

UMK Jeli-யில் கார் தடம்புரண்டு ஏரிக்குள் பாய்ந்தது; PhD மாணவர் மரணம், நண்பர் காயம்

ஜெலி, டிசம்பர்-3,

கிளந்தான், ஜெலியில் உள்ள UMK எனப்படும் மலேசிய கிளந்தான் பல்கலைக்கழக campus வளாகத்தில் கார் தடம்புரண்டு ஏரிக்குள் விழுந்ததில், PhD பட்டப்படிப்பு மாணவர் உயிரழந்தார்.

உடன் சென்ற நண்பர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

நேற்று மாலை 6.20 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் 25 வயது Muhammad Amidee Abdullah உயிரிழந்த வேளை, காரிலிருந்து வெளியே குதித்து தப்பிய நண்பர், ஜெலி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்தவர் ஓட்டிச் சென்ற Perodua Axia கார், மேட்டிலிருந்து பள்ளத்தில் இறங்கி வளையும் போது தடம்புரண்டதாக நம்பப்படுவதாக, ஜெலி போலீஸ் கூறியது.

மரணமடைந்த மாணவரின் உடல் சவப்பரிசோதனைக்காக ஜெலி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!