Latest

UPSI விபத்து; உரிம விதிமீறலுக்காக பேருந்து நிறுவனத்துக்கு RM20,000 அபராதம்

கோலாலம்பூர், நவம்பர்-7, UPSI பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் பலியாகக் காரணமான விபத்தில் தொடர்புடைய சுற்றுலா பேருந்து நிறுவனத்திற்கு, 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், அந்த Kenari Utara Travel & Tours Sdn. Bhd. நிறுவனம், 1992-ஆம் அண்டு சுற்றுலா தொழில் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட உரிம நிபந்தனைகளை மீறியதாக கண்டறியப்பட்டது.

அதாவது, விபத்துக்குள்ளான பேருந்தை, Noreem Maju Trading என்ற நிறுவனத்துக்கு விற்று அதன் பெர்மிட்டை அது வாடகைக்கும் விட்டுள்ளது.

ஆனால், வாங்கிய நிறுவனத்துக்கோ சுற்றுலா தொழில் சட்டத்தின் கீழ் முறையான பெர்மிட் இல்லை.

தவற்றை ஒப்புக் கொண்டதை அடுத்து Kenari Utara Travel பேருந்து நிறுவனத்துக்கு, நவம்பர் 3-ஆம் தேதி பேராக் கெரிக் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த அபராதத்தை விதித்தது.

ஒரு குற்றச்சாட்டுக்கு தலா 10,000 ரிங்கிட் என 2 குற்றச்சாட்டுகளுக்கு 20,000 ரிங்கிட் விதிக்கப்பட்டது.

அபராதம் செலுத்தாவிட்டல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் அறிவித்தது.

இதனை வரவேற்ற சுற்றுலா, கலை, பண்பாடு அமைச்சான
MOTAC, சுற்றுலா வாகனங்கள் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நடவடிக்கை, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்கும் எனவும் அது நம்பிக்கைத் தெரிவித்தது.

UPSI மாணவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த அப்பேருந்து, ஜூன் 9 விடியற்காலை திரங்கானு ஜெர்த்தேவிலிருந்து, தஞ்சோங் மாலிம் திரும்பும் வழியில் கெரிக் அருகே விபத்துக்குள்ளானது.

அதில் மேலும் 33 பேர் காயமடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!