Latestமலேசியா

UPSI முதலாமாண்டு மாணவர்களுக்கு முன்னோடித் திட்டமாக தேசிய சேவைப் பயிற்சி

தஞ்சோங் மாலிம், அக்டோபர்-13,

பேராக், தஞ்சோங் மாலிம் UPSI பல்கலைக் கழகத்தின் புதிய மாணவர்களுக்கு தேசிய சேவை 3.0 (NS 3.0) பயிற்சித் திட்டம் கட்டாயமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த சோதனை திட்டம் அடுத்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கும்.

இதையடுத்து பல்கலைக்கழக வளாக அளவில் PLKN பயிற்சியை நடத்தும் முதல் உயர் கல்விக் கூடமாக UPSI திகழ்கிறது.

இந்த முன்னோடித் திட்டத்திற்காக 2026 பட்ஜெட்டில் அரசாங்கம் RM250 மில்லியன் ஒதுக்கியுள்ளது.

பிறகு 2027 முதல், இத்திட்டம் பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கழகங்கள் மற்றும் பிற பொது பல்கலைக்கழகங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என, PLKN தலைமை இயக்குநர் Datuk Ya’cob Samiran தெரிவித்தார்.

பயிற்சியில் நாட்டுப்பற்று, தலைமைத்துவ ஆற்றல், அடிப்படை இராணுவ பயிற்சி ஆகியவை சேர்க்கப்படும்.

இதில் தடைகளை கடக்கும் பயிற்சி, காட்டில் உயிர் பிழைத்தால் திறன், ஏணியில் இறங்குதல், navigation எனும் வழி செலுத்தல் போன்ற பயிற்சிகள் இடம்பெறும்.

எனினும் ஏற்கனவே ROTU போன்ற இராணுவம் தொடர்பான பயிற்சி முடித்தவர்கள், இந்த தேசிய சேவைப் பயயிற்சியில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதிலிருந்து விலக்கு பெறலாம்.

இவ்வேளையில்
அடுத்தாண்டு 11 PLKN முகாம்கள் தொடங்கப்படவுள்ளன; 2027-ல் மேலும் பல முகாம்கள் சேர்க்கப்படும்.

பயிற்சி பெற 17 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் கணினி தேர்வு அல்லது தன்னார்வ அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!