Latestமலேசியா

Vape புகைத்ததால் தலைசுற்றல்; பள்ளிக் கட்டடத்திலிருந்து விழுந்த இரண்டாம் படிவ மாணவன்

கங்கார், நவம்பர்-14, பெர்லிஸ் கங்காரில் Vape புகைத்ததால் தலைசுற்றலுக்கு ஆளான இரண்டாம் படிவ மாணவன், பள்ளியின் முதல் மாடி கூரையிலிருந்து கீழே விழுந்து காலில் காயமடைந்தான்.

நேற்று காலை 11 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக மாநிலக் கல்வி இலாகா கூறியது.

ஓய்வு நேரம் முடியும் போது வகுப்பறையில் அவன் Vape புகைத்துள்ளான்.

ஆனால் திடீரென தலைசுற்றல் மற்றும் மயக்கம் வருவது போல் இருந்ததால், முதல் மாடியின் கூரை வழியாக அவன் இறங்கி நடந்துச் சென்றான்.

தலைசுற்றியதால் தரையில் விழுந்தவன் மயக்கத்தில் ஏதேதோ உளற அவனை ஆசிரியர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போய் போலீஸ் வரவழைக்கப்பட்டது.

பின்னர் கங்கார் கிளினிக்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதில், அவன் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்பது உறுதிச்செய்யப்பட்டது.

மாணவனின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

மாணவர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் ‘mushroom flavour’ வகையைச் சேர்ந்த vape-பை அம்மாணவன் புகைத்ததாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!