Latestமலேசியா

VM2026: 23 மணி நேரம் ஹோட்டலில் தங்க அனுமதிப்பீர்; MOTAC கோரிக்கை

கோலாலாம்பூர், மார்ச்-1-‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டை’ முன்னிட்டு, சுற்றுப் பயணிகளுக்கு குறைந்தபட்சம் 23 மணி நேரங்கள் தங்கும் வசதியை ஹோட்டல்கள் வழங்க வேண்டும்.

சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சான MOTAC அப்புதிய பரிந்துரையை முன்வைத்துள்ளது.

உதாரணமாக, பிற்பகல் 2 மணிக்கு check-in செய்து, மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு check-out செய்யும் வகையில் திட்டம் அமைக்கப்பட வேண்டுமென அது கேட்டுக் கொண்டது.

இதன் மூலம், சுற்றுப் பயணிகள் செலுத்தும் கட்டணத்துக்கு தகுந்த மதிப்பு கிடைப்பதோடு, Visit Malaysia 2026 திட்டத்தை மேலும் கவர்ச்சியாக மாற்றவும் முடியும் என அமைச்சு கூறியது.

ஹோட்டல்களில் தாமதமான check-in ஆனால் விரைவான check-out என்பது பரவலாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் காணப்படும் புகாராகும்.

எனவே, இதனை சரிசெய்ய, அமைச்சு ஹோட்டல்களை ஊக்குவிக்கிறது.

ஆனாலும், இது ஹோட்டல் நடத்துநர்களின் முடிவே, இதில் அரசாங்கம் எதனையும் கட்டாயப்படுத்த முடியாது என MOTAC தெளிவுப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!