
ஜோர்ஜ் டவுன் , ஏப்-16-தனியார் மருத்துவமனையின் உணவகம், கரப்பான் பூச்சிகள் உட்பட அசுத்தமான நிலையில் இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, பினாங்கு மாநில சுகாதாரத் துறை அந்த உணவகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளது.
அங்கு உணவு அசுத்தமாகியிருக்கலாம் என்பது குறித்து கடந்த திங்கட்கிழமை பெறப்பட்ட ஒரு பொதுப் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டேனியல் கூய் ஜி சென் ( Daniel Gooi Zi Sen ) தெரிவித்தார்.
புகாரைப் பெற்றவுடன் பினாங்கு தேசிய சுகாதார சேவை உடனடியாக ஆய்வு நடத்தியதில், அந்த உணவகத்தின் தூய்மை நிலை திருப்தியற்றதாகவும் மிகவும் மோசமாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறையின் கீழ் மூடுவதற்கான உத்தரவும் அபராதமும் அதே நாளில் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார்.



