திரங்கானு, செப்டம்பர் 2024 – மலேசியத் திரங்கானு பல்கலைக்கழகம் அதன் ஏற்பாட்டில் முதன் முறையாக அனைத்துலகத் தமிழிளையோர் மாநாடு ஒன்றை ஏதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி ஏற்பாடுச் செய்துள்ளது.
புரட்சியின் ஊற்று, தமிழிளையோர் கூற்று என்ற கருப்பொருளைத் தாங்கி நடைபெறவிருக்கின்ற இந்த மாநாட்டிற்கு, தற்போது ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்த மாநாட்டிற்காக உற்சாகமான மாநாட்டுப் பாடலுக்கான வரிகளையும் திராங்கானு பல்கலைக்கழகம் தேடி வருகின்றது.
இம்மாநாட்டிற்கான பாடல் வரிகளுக்கு, மலேசிய இசையமைப்பாளர் Shameshan இசையை உருவாக்குவார்.
ஆக, உங்களிடம் தரமான பாடல் வரிகளை அமைக்கும் திறன் இருந்தால், திரையில் காணும் எண்ணைத் தொடர்பு கொண்டு உடனே உங்களின் வரிகளைச் சமர்ப்பிக்கலாம்.
அதேவேளையில், ஏழாவது முறையாக மலர்ந்துள்ள விண்ணைப் பிளக்கும் வானரங்கச் சொற்போருக்கான தகுதி சுற்றுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இலங்கை, சிங்கப்பூர், இந்தியா, மலேசியா என அனைத்துலக அளவில் நடைபெறவுள்ள இந்த சொற்போரில், மொத்தம் 15,000 ரிங்கிட்டிற்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்போட்டிகள் குறித்த மேல் விவரங்களுக்கு UMT தமிழ்ச் சொற்போர் பிரிவின் சமூக வலைத்தளங்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.