
கோலாலம்பூர், மார்ச் 2- தற்போதைய வட்டார பாதுகாப்பு நிலைமை காரணமாக அபுதாபியில் உள்ள மலேசிய தூதரகம் இன்று பொதுமக்களுக்கு மூடப்பட்டது.
இதன் காரணமாக அங்கு தூதரக சேவைகள் கிடைக்காது. எனினும் ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்க தூதரக குழு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் தயாராக இருப்பதாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் +971 50 614 6894 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது mwabudhabi@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது.



