கோலாலம்பூர், ஏப் 21- அம்பாங் , Bukit Antarabangsaவில் River Dale அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள கால்வாயில் விழுந்த ஆறு வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர். நேற்றிரவு இரவு 8.34 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து Pandan Indah தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அச்சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அறுவர் கொண்ட மீட்புக் குழுவினர் 4.57 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் தலையில் காயத்துடன் காணப்பட்ட அச்சிறுவனை பாதுகாப்புடன் மீட்டு சிகிச்சை மற்றும் மேல் நடவடிக்கைக்காக மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் என தீயணைப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
Related Articles
பத்து பூத்தே விவகாரம் குறித்து சர்ச்சைக்குரியக் கருத்து; ஹாடி அவாங் விசாரிக்கப்படுவதாக IGP தகவல்
1 second ago
சாலையில் விழுந்த மோட்டார் சைக்கிளோட்டியை இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியது; சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது
5 mins ago
Check Also
Close