Latestமலேசியா

அரசு ஊழியர்கள் தினமும் பாத்திக் அணிய ஊக்குவிப்பு

புத்ராஜெயா, ஏப்ரல்-7-அரசாங்க ஊழியர்கள் தினமும் வேலைக்கு பாத்திக் ஆடைகளை அணிய ஊக்குவிக்கப்படுகிறது.

மின்சார பயன்பாட்டை குறைக்கும் முயற்சியாக, அரசு அலுவலகங்களில் குளிரூட்டிகளின் வெப்பநிலையை குறைந்தது 24 பாகை செல்சியஸாக ஒருமுகப்படுத்தும் நடவடிக்கைக்கு ஏற்ப இது அமைவதாக, பொதுச் சேவை தலைமை இயக்குநர் தான் ஸ்ரீ Wan Ahmad Dahlan Abdul Aziz கூறினார்.

அலுவலக வெப்பநிலை அதிகரிக்கப்படுவதால், இலகுவான மற்றும் காற்றோட்டமான பாத்திக் உடை அணிவது ஊழியர்களுக்கு வசதியாக இருக்கும் என அவர் சொன்னார்.

நடப்பில், பாத்திக் ஆடைகள் அணிவது வியாழக்கிழமைகளில் கட்டாயமாகும்; என்றாலும் அலுவலக உடைகளுக்கு மாற்றாக மற்ற நாட்களிலும் பாத்திக் உடைகளை இனி அரசு ஊழியர்கள் அணியலாம் என்றார் அவர்.

அதே சமயம், அந்தந்த துறைத் தலைவர்களின் அனுமதிக்கு ஏற்ப தேவைப்பட்ட நாட்களில், தேவைப்பட்ட பணிகளுக்கு அலுவலக உடைகளை அவர்கள் அணிவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

என்றாலும் இந்த ஆடைக் கட்டுப்பாடு தளர்வு சீருடைப் பணியாளர்களுக்கு பொருந்தாது என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!