
கோலாலம்பூர், அக்-19-முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad, தமது உடல்நிலை இன்னும் முழுமையாகச் சீரடையாத போதிலும், மீண்டும் அலுவலகத்திற்குச் செல்ல முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தனது மனைவி மறைந்த Tun Dr Siti Hasmah Mohamad Aliயின் இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்வதில் உதவிய அனைவருக்கும் தனது குடும்பத்தின் சார்பில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், Siti Hasmahவின் அடக்கத்தலத்திலும் பிற இடங்களிலும் அவருக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மகாதீர் நன்றி நவிழ்ந்தார். Siti Hasmahவுடன் நீண்ட காலம் இணைந்து வாழும் வாய்ப்பை வழங்கியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதை அப்பிரார்த்தனைகள் நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் தமக்கு ஆறுதல் கூறியவர்கள், அனுதாபச் செய்திகளை அனுப்பியவர்கள் என அனைவருக்கும் அவர் நன்றி கூறினார். அவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தம்மால் உடனடியாகப் பதிலளிக்க முடியாமல் போனதற்காகவும் மகாதீர் வருத்தம் தெரிவித்தார்.
தமது உடல்நிலை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக, தம்மைச் சந்தித்தவர்களுக்கு அல்லது கை அசைத்து மரியாதை செலுத்தியவர்களுக்குப் பதிலளிக்கவோ முடியாமல் இருந்திருக்கலாம். அதற்காகத் தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.



