Latestமலேசியா

ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் (ADMM-Plus) பங்கேற்க கோலாலம்பூர் வந்த இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

கோலாலம்பூர், அக்டோபர்-31,

கோலாலம்பூரில் நடைபெறும் 12-ஆவது ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் (ADMM-Plus) பங்கேற்பதற்காக, இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 2-நாள் மலேசியப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

சுபாங் விமானப் படைத் தளத்தில் நேற்று வந்திறங்கிய அவரை, மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி. என். ரெட்டி வரவேற்றார்.

இப்பயணத்தின் போது, அவர் ‘ADMM-Plus-ன் 15 ஆண்டுகள்: அனுபவங்கள் மற்றும் எதிர்காலப் பாதை’ என்ற தலைப்பில் உரையாற்றுவார்.

அதே சமயம், ஆசியான்-இந்தியா இரண்டாம் தற்காப்பு அமைச்சர்கள் அவசரக் கூட்டத்திலும் பங்கேற்பார்; அதோடு இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்தியாவின் “Act East” கொள்கையை முன்னேற்றவும் அவர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரங்களில் ஒருவரான ராஜ்நாத்தின் மலேசிய வருகை, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையேயான தற்காப்பு உறவுகளையும், இந்தோ-பசிஃபிக் பகுதியில் அமைதியையும் வலியுறுத்துகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!