
கோலாலாம்பூர், ஜூலை—14 – ஆசியான் வட்டாரத்திலேயே இரண்டாவது மிக அமைதியான நாடாக மலேசியா தேர்வுப் பெற்றுள்ளது.
அதே சமயம் உலகளவில் 163 நாடுகளில் மலேசியா 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
எனினும், கடந்தாண்டை விட இது ஓரிடம் சரிவாகும்.
2025-ஆம் ஆண்டுக்கான உலக அமைதிக் குறியீட்டுப் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது.
கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் ஆசியானின் முதலிடத்திலும் உலகளவில் ஆறாவது இடத்திலும் சிங்கப்பூர் உள்ளது.
உலகளவில் வியட்நாம் 38-ஆவது இடத்திலும், இந்தோனேசியா 49-ஆவது இடத்திலும், தாய்லாந்து 86-ஆவது இடத்திலும் உள்ளன.
உலகிலேயே மிகவும் அமைதியான நாடாக தொடர்ந்தாற்போல் 17-ஆவது ஆண்டாக ஐஸ்லாந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதற்கடுத்தடுத்த இடங்களில் அயர்லாந்து, ஆஸ்திரியா, நியூ சிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவை உள்ளன.
மக்களுக்கான பாதுகாப்பு, நெருக்கடிகள், இராணுவத் தாக்கம் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில், 163 நாடுகளை உட்படுத்திய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.