Latestமலேசியா

ஆடம்பர MPV வாகனம் ஆற்றில் விழுந்தது ஆடவர் காயம்

அலோஸ்டார், ஜூலை 16 – அலோஸ்டார் , சுல்தானா பஹியா ( Sultanah Bahiyah ) மருத்துவமனைக்கு பக்கத்திலுள்ள Jalan ban Telaga Bata சாலையில் ஆடம்பர MPV Toyota Alphard கவிழ்ந்து அருகேயுள்ள ஆற்றில் விழுந்ததில் அதன் ஓட்டுநரான 41 வயதுடைய ஆடவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து நேற்றிரவு மணி 8.01 அளவில் தகவல் கிடைத்ததாக கெடா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற அறுவர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் வாகனத்தில் இருந்த நபரை மீட்டு முதலுதவிக்காக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர். அதன் பின் அந்த ஆடவர் தீயணைப்பு படையின் மருத்துவ சேவையின் அவசர வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!