
கூச்சிங், மார்ச் 27 – ரந்தாவ் பஞ்சாங்கில் சரவா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பதின்ம வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாக அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று பிற்பகல் மணி 2.41 க்கு அவசர அழைப்பு வந்ததாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நடவடிக்கை மையம் தெரிவித்தது.
பிற்பகல் மணி 2.30 மணியளவில் ஒரு முதலையால் தாக்கப்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட பையன் தனது தாயாருடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆற்றுப் பகுதியில் தற்போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



