கோலாலம்பூர், செப்டம்பர் 10 – மலேசியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வலம் வந்த உள்ளூர் தமிழ் பயணத் தொடரான ‘ரசிக்க ருசிக்க’ மீண்டும் ‘ரசிக்க ருசிக்க ரீலோடட்’-ஆக சீசன் 7-யில் மலர விருக்கிறது.
இந்தச் சீசனில் பி.ஜி.டபல்யு என்று அன்புடன் அழைக்கப்படும் பால கணபதி வில்லியம் தொகுப்பாளராக இருப்பதோடுப் புதுமுக இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளனர்.
2014-ஆம் ஆண்டில் முதல் சீசனின் பிரீமியரைத் தொடர்ந்து அதன் 10-வது ஆண்டின் நிறைவு விழாவை இவ்வாண்டுக் கொண்டாடும் ரசிக்க ருசிக்க ரீலோடட், அனைத்து வயதினரின் இதயங்களிலும் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இருந்துப் பல்வகையான உணவுகளை சித்தறிக்கும் வகையில் அமையவுள்ள சீசன் 7, பார்வையாளர்களுக்கான நுண்ணறிவுத் தகவல்களுடன் பொழுதுபோக்குக் கூறுகளுடன் பன்முகத்தன்மைக் கொண்ட நம் நாட்டின் உணவுக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான இணக்கமானப் பிணைப்பைத் தழுவி வலம் வரவுள்ளது.
கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, புச்சோங், செகிஞ்சான், சிரம்பான், நிலாய், ஈப்போ, தாப்பா, கோலா கங்சார் மற்றும் பல இடங்களுக்குப் பயணம் செய்வதோடு ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு முதன்மை உணவு வகைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு பி.ஜி.டபல்யு மதிப்பாய்வுச் செய்வார்.
எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுவுள்ளதாக ஆஸ்ட்ரோ அறிவித்தது.
நீங்களும் இந்நிகழ்ச்சியை கண்டு மகிழே, இன்றே 30% தள்ளுபடி* மற்றும் இலவச நிறுவலுடன் மாதத்திற்கு RM41.99 கட்டணத்தில் புதிய ஆஸ்ட்ரோவிற்கு பதிவுச் செய்யலாம்.
மேல் விபரங்களுக்கு astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.