Latestமலேசியா

இடியுடன் கூடிய மேகங்களால் சிறிய சுழற்காற்று உருவானது – மலேசிய வானிலை ஆய்வுத் துறை

பெட்டாலிங் ஜெயா, அக்-14 – டாமான்சாரா (Damansara) சுங்கச்சாவடி அருகே நேற்று மாலை உருவான சிறிய சுழற்காற்று, தீவிர இடியுடன் கூடிய மேகங்களுக்கு மத்தியில் உருவானதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை தலைமை இயக்குநர் ஹிஷாம் அனிப் (Hisham Anip) தெரிவித்தார்.

இடியுடன் கூடிய மேகங்கள் உருவாகும்போது, வெவ்வேறு திசைகளில் வீசும் காற்றும் மேல்நோக்கி எழும் காற்றோட்டமும் இணைவதால் சுழற்காற்று ஏற்படலாம் என்றார்.

மலேசியாவில் உருவாகும் இத்தகைய சுழற்காற்றுகள் பொதுவாக 10 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை என்றும், குறுகிய நேரமே நீடிக்கும் என்றும் அவர் கூறினார். இதனால் வானிலை ரேடார் மற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் அவற்றைக் கண்டறிவது கடினமாக உள்ளது.

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சிலாங்கூரின் பல மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பருவமழை மாறும் காலங்களான மார்ச் முதல் மே வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் நிலப்பரப்பிலும் நீர்நிலைகளிலும் சுழற்காற்றுகள் அடிக்கடி உருவாகக்கூடும் என்றும் அவர் விளக்கினார்.

டாமான்சாரா சுங்கச்சாவடியில் சுழற்காற்று வீசியபோது, ஒரு காரின் பின்பகுதி காற்றின் வேகத்தால் மேலே தூக்கப்படுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!