
ஜோகூர் பாரு, ஜூலை 15 – இன்று முதல் 26 மணி நேரத்திற்கு தெப்ராவ் உட்பட ஜோகூர் பாரு நகரிலுள்ள 30,000த்திற்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் நீர் விநியோக தடையை எதிர்நோக்கியுள்ளனர்.
நீர் சுத்திகரிப்பு முறையில் நீடித்த மற்றும் நீண்ட கால அடிப்படையில் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக பாசீர் கூடாங்கில் Sultan Iskandar நீர் சுத்திகரிப்பு மையத்தில் சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதால் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், சிறுநீரக சுத்தகரிப்பு மையங்கள் மற்றும் தொடர்ந்து நீர் விநியோகம் தேவைப்படும் இடங்களில் அவசர தேவைக்காக டிரக் டாங்குகளில் தனது தரப்பினர் நீர் விநியோகிப்பார்கள் என Ranhil SAJ Sendirian Berhad ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அனுவார் அப்துல் கனி இதற்கு முன் கூறியிருந்தார்.
பயனீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் கூடியபட்ச நிலைமையில் நீர் விநியோக முறை இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக நீர் விநியோக தடை ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.